Sunday, 11 November 2012

Photoshop tamil


altசில காட்சி தேவை இல்லாததாகவும், பின்னணி இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தை போட்டோசாப் எளிதாக செய்து கொடுக்கிறது.
படம்.1.
போட்டோசாப்பில் திறந்து கொண்டு பில்டருக்குச் செல்லுங்கள். Extract.. தேர்வு செய்ய தனி விண்டோ தோன்றும்.
alt
படம்.2.
படத்தில் காட்டியுள்ள தூரிகையை தேர்வு செய்து துண்டாக்க வேண்டிய பகுதியை ஓரப்பகுதியை வரைய வேண்டும். எனது விண்டோவில்  இளம் பச்சை நிறம் காட்டுகிறது. இது நமது தேர்வே.
alt
படம்.3
தேர்வு செய்த பாகத்தை, அதாவது தேவையான பகுதியை வண்ணத்தினால் நிறப்ப வண்ண பக்கெட்டை தேர்வு செய்து நிறப்ப வேண்டும்.
பிறகு பிரிவியு சென்றால் நீக்கப்பட்ட பகுதியை தவிர்த்து தோன்றும்.
இத்தோற்றத்தில் ஓரத்தில் பிசிருகள் இருந்தால் குணமாக்கும் (Heal) கருவியை கொண்டு குணமாக்கலாம்.
alt
படம்4.
தேவையான வெட்டி எடுக்கப்பட்ட பகுதி. தேவையான பட பின்னணியில் சேர்த்து பாருங்கள்.
alt altபுகைப்படங்களை கலைநயம் மிக்க படைப்பாக மாற்ற போட்டோஷாப் பல வகைகளில் நமக்கு உதவி புரிகிறது.அந்த வகையில் இன்று பார்க்கப்போவது சூரியோதயம்.ஒரே நிமிடத்தில் முடிந்து விடக்கூடிய மிக எளிமையான படைப்பு.

alt
மேலே இரண்டு படங்கள் உள்ளது. இதில் உதாரணமாக படம் ஒன்று நமக்கு பிடித்த படம்.ஆனால் படம் இரண்டில் உள்ளது போல் சூரியோதயம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தால் கவலையே பட வேண்டாம்.ஒரே நிமிடத்தில் அதை செய்து விடலாம்.அதை எப்படி என்பதை பார்ப்போம்.

போட்டோஷாப்பில் இரண்டு படங்களையும் திறந்து கொள்ளுங்கள்.
alt
படங்களை திறந்து கொண்டவுடன் Image - Adjesment - Match Color ஐ Click செய்யுங்கள். வரும் விண்டோவில்  Lumunance-100, Color Intensity-100, Fade-50 என மதிப்பு கொடுங்கள். fade ன் மதிப்பை உங்கள் விருப்பதுக்கு கூட்டிக்குறைத்துக்கொள்ளலாம்.கீழே Source என்பதில் படம்-2 ஐ தேர்வு செய்யுங்கள்.அதாவது நமக்கு தேவையான கலர் உள்ள படம்.இபோழுது Ok செய்யவும்.
alt
Ok தந்தவுடன் நமக்கு கிடைத்த படம்.கீழே பாருங்கள்.இதில் Fade ன் மதிப்பு 25 தந்துள்ளேன்.
alt altபோட்டோசாப்பில் சில வடிவ தூரிகைகள் மட்டும் கொடுத்து இருப்பார்கள்.ஆனால் விளம்பரம் மற்றும் திரைத்துறை வடிவமைப்பில் வரும் வடிவமைப்புகள் நம்மை பிரமிக்க வைத்து இருக்கும்.

நான் மாதிரி தூரிகைகளின் படத்தை தந்துள்ளேன். இது போல ஆயிரமாயிரம் தூரிகைகள் கிடைக்கும்.
ஒரே சொடுக்கில் ஒரு ஓவியத்தை படைக்க தூரிகைகளை சில வளைத்தளங்கள் இலவசமாக கொடுக்கிறார்கள்.இதை பதிவிரக்கம் செய்து நாம் பயன் படுத்த வேண்டியதுதான். சில முகவரிகளை தந்துள்ளேன்.
alt
பதிவிரக்கம் செய்த தூரிகைகளை எப்படி போட்டோசாப்பில் இணைப்பது பற்றி பார்ப்போம்.போட்டோசாப்பினுல் சென்று பிரஷ் கருவிக்குச் செல்லுங்கள்.படத்தி காட்டியுள்ளபடி முக்கோண அய்க்கானை சொடுக்க தோன்றும் பட்டையில் Load brush.. என்ற தேர்வை கிளிக் செய்து தூரிகை யுள்ள கோப்பில் இருந்து பதிவேற்றுங்கள்.பெரும்பாலும் ஜிப் வடிவத்தில் தான் சுருக்கிக் கொடுப்பார்கள்.விரித்து பிரஷ் தேர்வு செய்து பயன்படுத்துங்கள்.FlowerXXXXXXXX .abr என்ற எக்ஸ்டன்சன் வடிவில் இக்கோப்பு கிடைக்கும்.தூரிகை உங்கள் வசமாகட்டும்.
 
alt
alt altசிவப்பு வண்ணத்தை கொண்ட பூக்களின் படம் திறந்துள்ளேன். இதில் சிவப்பு வண்ணம் தவிர்த்து மற்ற பகுதியை கருப்பு வெள்ளை படமாக்கப்போகிறோம்.

alt
 
படம்.2. சிவப்பு வண்ணத்தை மட்டும் தேர்வு செய்ய செலக்ட்-கலர் ரேஞ் தேர்வு செய்ய வேண்டும்.
alt
படம்.3. கலர் ரேஞ் விண்டோ திறந்துள்ளது. இதில் சிவப்பு நிறத்தை தேர்வு செய்யவும்.
alt
படம்.4. சிவப்பு நிறம் தேர்வாகிவிடட்து.
alt
படம்.5. பிறகு தேர்வு செய்த பகுதியை மட்டும் புதிய லேயரில் காப்பி செய்யவேண்டும். இதற்கு சார்ட் கட் கீயில் கண்ட்ரோல் + J கீக்களை அழுத்த புதிய லேயரில் தேர்வுப்பகுதி மட்டும் காப்பியாகி இருக்கும்.
alt
படம்.6. இறுதி நிலைக்கு வந்துள்ளோம். லேயரில் பேக் கிரவுண்டில் உள்ள லேயரை டீசேச்சுரைட் (Desaturate ) செய்யப் போகிறோம். அதற்கு படத்தில் காட்டியுள்ளபடி Image- Adjustment- Desaturate தேர்வுசெய்ய வேண்டும்.
alt
படம்.7. மேற்கண்ட முறையை சார்ட் கை கீயின் மூலமாக
Shift + Ctrl +U கீக்களை அழுத்த கருப்பு வெள்ளையாக மாறும். சேமித்து வர வேண்டியது தான் பாக்கி.
இதில் வெவ்வேறு வண்ணத்தை தேர்வு செய்து பழக புதிய இதைவிட சிறந்த படங்கள் கிடைக்கலாம்.
alt
alt altபோட்டோசாப்பில் மிக மிக முக்கியமான கருவி மாஸ்க் ,அதாவது படத்திற்கு முகமுடியிட்டு அழகு படுத்தப்போகிறோம். இக்கருவி பழக்கமாகிவிட்டால் பல அழகிய கவித்துவம் மிக்க படங்களை உருவாக்கலாம்.
படம்.1. போட்டோசாப்பில் இரண்டு படங்களை திறந்துள்ளேன்.
இரண்டு படங்களை மாஸ்கின் உதவியால் ஒட்டப்போகிறேன். இம்முறையில் ஒட்டிய வடிவத்தை பார்க்கமுடியாது.. ஒன்றுடன் ஒன்று இழைந்து காணப்படும்....
alt
படம்.2. இப்படத்தில் ரோஜாக்கள் உள்ள படத்தின் மீது குழந்தையின் படத்தை காப்பி & பேஸ்ட் முறையில் ஒட்டியுள்ளேன்.

இந்நிலை லேயர் விண்டோவில் தெரிகிறது..
alt
படம்.3. குழந்தையுள்ள படத்தின் மீது தான் மாஸ்க் உண்டாக்கப்
போகிறோம். அதற்கு எளிய வழி இவ்விண்டோவில் எப் அய்க்கானுக்கு பக்கத்தில் உள்ள சதுர வடிவ வட்டத்தினை கிளிக் செய்ய மாஸ்க் தோன்றிவிடும்.
alt
படம்.4. டூல் பாரில் உள்ள கிரேடியன் தேர்வு செய்ய வேண்டும். கிரேடியன் வண்ணம் கருப்பில் இருந்து வெள்ளைக்கு செல்வதாகவே இருக்க வேண்டும்.
இதை தேர்வு செய்ய வேண்டும். பிறகு மாஸ்க் மீது ஒரு கிளிக் செய்யுங்கள்.. அடையாளப்படுத்தியுள்ளேன்.
alt
படம்.5. இவ்விடத்தில் மிக மிக முக்கியமான இடம்.. முதலில் லேயரில் நமது தேர்வு இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பிறகு மறைக்க வேண்டிய இடத்தில் கிரேடியன் தேர்வை அழுத்தி இழுக்க படம் இழைந்து மறையும்.. எவ்வளவு தூறம் மறைய வேண்டும் என்பதை உங்களின் தேர்வை பொருத்தே அமையும்...
இப்போது மாஸ்கை பார்த்தால் கருப்பு வெள்ளை தோற்றம் பதிவாகியிருக்கிறது.. நமக்கு வேண்டிய தோற்றம் கிடைத்தவுடன் சேமியுங்கள்.. நீங்கள் இக்கருவியில் பழகிவிட்டால் நல்ல நல்ல வாழ்த்து அட்டைகளை உண்டாக்கலாம்..
alt

No comments: