தமிழ்99 விசைப்பலகை தாங்க உலகிலேயே சிறந்த தமிழ் விசைப்பலகை.
இதில என்ன சிறப்பா?1. விசையழுத்தங்கள் (keystrokes) ரொம்ப குறைவுங்க. இது தான் முதன்மையான சாதகம். அடுத்து வர்ற சிறப்புகளுக்கும் இது தான் காரணம். கிரந்த எழுத்துக்கள், புழக்கத்தில் இல்லாத சிறப்பு எழுத்துக்கள் தவிர எல்லா தமிழ் எழுத்துக்களையும் SHIFT, CTRL விசை இல்லாம அழுத்த முடியும். உயிர் எழுத்து, அகர உயிர்மெய்கள் இரண்டையும் ஒரே விசையில் அழுத்த முடியும். கிரந்த எழுத்துக்களுக்கு அதிகம் மெனக்கட வேண்டி இருப்பதால் பல சமயம் ஜன்னல் என்று எழுதுவதற்கு சன்னல் என்று எழுதுவதால், கிரந்த எழுத்துக்களின் அனாவசியத் தேவையை ஒழிக்கலாம்.
எடுத்துக்காட்டுக்கு, romanised / அஞ்சல் / தமிங்கில முறைக்கும் தமிழ்99 முறைக்கும் தேவைப்படும் விசையழுத்தங்களைப் பார்ப்போம்.
சொல் | romanised | தமிழ்99 | keystrokes saved |
தொழிலாளி | thozilaa+SHIFT+li | த ஒ ழ இ ல ஆ ள இ | 3 |
வெற்றி | ve+SHIFT+r+SHIFT+ri | வ எ ற ற இ | 2 |
கணையாழி | ka+SHIFT+naiyaazi | க ண ஐ ய ஆ ழ இ | 4 |
தந்தம் | thantham | த ந த ம f | 3 |
உயிரெழுத்துக்கள், அகர உயிர்மெய்யெழுத்துக்களை எப்படி உள்ளிடுவதென்று விசைப்பலகையை பார்த்தாலே புரியும். இனி, பிற உயிர்மெய்யெழுத்துக்களுக்கு மட்டும் ஒரு சுருக்கமான வழிகாட்டி.
எழுத்து | விசை வரிசை |
த் | த f |
த | த |
தா | த ஆ |
தி | த இ |
தீ | த ஈ |
து | த உ |
தூ | த ஊ |
தெ | த எ |
தே | த ஏ |
தை | த ஐ |
தொ | த ஒ |
தோ | த ஓ |
தௌ | த ஔ |
2. இலக்கணப்படி பல இடங்களில் அதுவே மெய்யெழுத்துக்களுக்கு புள்ளியும் வைத்துக் கொள்ளும். இதனால் எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை இரண்டையுமே ஒழிக்கலாம்.
3. பழகிக்கிறது எளிது. எழுத்துக்கள் இருக்கிற இடங்கள நினைப்புல வைச்சிக்கிறதும் எளிது. உயிரெழுத்துக்கள் ஒரு பக்கமாகவும் அகர உயிரெழுத்துக்கள் இன்னொரு புறமாகவும் ஒழுங்காக ஒரு வரிசையில் அமைஞ்சிருக்கு. அகர உயிர்மெய்யெழுத்துக்கள் அமைஞ்சிருக்கிறதுலயும் நெருக்கமான எழுத்துக்கள் அருகே அருகே இருக்குமாறு ஒரு ஒழுங்கு இருக்கு. அதிகம் அடுத்து வரும் எழுத்துக்கள் பக்கத்தில பக்கத்துல இருக்கு.
எடுத்துக்காட்டுக்கு,
ந – த; ங – க; ண – ட; ன – ற; ஞ – ச
ஆகிய எழுத்துக்கள் அருகருகில இருக்கும்.
4. தமிழ் எழுத்துக்களை எப்படி புரிஞ்சிக்கிறமோ அந்த வகையில தான் இதுவும் அமைஞ்சிருக்கு. அதாவது, உயிரும் மெய்யும் சேர்ந்து உயிர்மெய் என்பது தான் இவ்விசைப்பலகையின் அடிப்படை.
5. மிக வேகமா தட்டச்சு செய்யலாம். அயர்ச்சி, சோர்வு வராது. கடந்த ஒரு வருஷமா தான் தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துறேன். ஆனா, 7 வருஷம் பழக்கமான ஆங்கிலத்தோட வேகமா தட்டச்ச வருது. எப்படி இவ்வளவு வேகமா தட்டச்சு செய்யுறேன்னு நண்பர்கள் வியக்குறாங்க. பழகினதுக்கு அப்புறம் விசைப்பலகைய பார்க்காமயே தட்டச்சு செய்ய எளிது. ஆங்கில விசைப்பலகைக்கு கூட எனக்கு இன்னும் இந்த நம்பிக்கை வரவில்லை. தட்டச்சுப் பயிற்சி நிலலயத்துக்கு செல்லாம நீங்களே இத கத்துக்க எளிது.
6. இது பல தமிழறிஞர்கள் ஒன்று கூடி ஆலோசிச்சு கூடி உருவாக்கி, சோதிச்சுப் பார்த்து தமிழக அரசால் கணித்தமிழுக்காக அங்கீகரிக்கப்பட்ட ஒரே விசைப்பலகை. பிற விசைப்பலகைகள் எல்லாம் இந்த மாதிரி இல்லாம தனி முயற்சியில் உருவானவை. எனவே அதில் உள்ள நுட்பத் திறமும் குறைவாக இருக்கும்.
ஒருமுறை தமிழ்99 பயன்படுத்திப் பழகிவிட்டால் பிறகு கனவிலும் பிற முறைகளில் தட்டச்ச மனம் வராது.
No comments:
Post a Comment